தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்!

சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை சுமார் 150 ரூபாவால் வேகமாக அதிகரித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தமது இருப்புக்களை வைத்திருப்பதன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவதாகக் கூறிய சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா,1000 ரூபாய் வரை விலை அதிகரிக்கலாம் என எச்சரித்தார்.

இன்றுவரை தேங்காய் எண்ணெய்க்கு நிதியமைச்சு வரி விதிக்கவில்லை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவில்லை, தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீடு இல்லை என்றும் அவர் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை விமர்சித்தார்.

தேங்காய் எண்ணெய் விலையை குறைக்க உதவும் வகையில் உள்ளூர் கைத்தொழில்துறையினர், கைத்தொழில்துறையினர் ஆகியோருக்கு அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply