ஊடகவியலாளர் தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்  மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள  தம்பித்துரை பிரதீபன் எனும் ஊடகவியலாளர் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் ஒன்று  தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டதுட்டன் அதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , நேற்று (18) மூவரை கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார்   தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply