பாடசாலை பேருந்து விபத்து! 20 மாணவர்கள் படுகாயம்!

கடுவெல ரணால என்ற இடத்தில் சிசு சரிய எனும்   பாடசாலை பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிசு சரிய எனும் பேருந்து இன்று (19) பிற்பகல் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துடன் மோதியுள்ளது. 

இதேவேளை,   காயமடைந்த பயணிகள் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply