சுகயீன விடுமுறை போராட்டம்!

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.

இதன்போது சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்

இதேவேளை, இன்று முதல் பல்கலைக்கழகத்திற்கு சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் சத்தியாக்கிரக போராட்டத்தை கொழும்புக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply