பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகளுக்கு விடுதலை!

பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 289 கைதிகள் இன்று (ஜூன் 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம், சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 263 ஆண் கைதிகளுக்கும், 6 பெண் கைதிகளுக்கும் அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னிக்கப்பட்ட கைதிகளில் 19 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலும், 30 பேர் மஹர சிறைச்சாலையிலும், 30 பேர் வாரியபொல சிறைச்சாலையிலும், 28 கைதிகள் களுத்துறை சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply