இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் நேற்று (20) ஒரு சில மணித்தியாலங்களுக்கு இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.
இலங்கையில் சிறப்பு டிஜிட்டல் அடையாள அட்டை முறை அறிமுகமாகவுள்ளதால், குறித்த டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரித்தல் உட்பட மின்சார ஒப்பந்தம் ஒப்பந்தம் ஆகியவற்றை அதானிக்கு வழங்குவது உள்ளிட்ட 10 அல்லது 12 திட்டங்களுக்கு உடன்படுமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அவர் இலங்கை வந்திருந்தார்” இவ்வாறு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; இந்திய வெளியுறவு அமைச்சர் வந்து சென்றுள்ளதன் அடுத்த நீட்சியாக ஒகஸ்ட் மாதம் இந்தியப் பிரதமர் இலங்கை வரவுள்ளார். அப்படியென்றால் இந்திய வெளிவிவகார அமைச்சர் இப்போது எதற்காக இலங்கை வருகிறார்? என்னென்ன திட்டங்களைப் பற்றி பேசப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பிய போது, சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இதற்கு பதிலளிக்கையில், “இது தொடர்பில் என்னால் தற்போது எந்தத் தகவலையும் வழங்க முடியாது. ஏனென்றால் எனக்கு அதைப் பற்றி தெரியாது. நான் அதை வெளியுறவு அமைச்சிற்குதெரியப்படுத்தி இதற்கான பதிலை இன்று தருவதற்கு முயற்சிக்கின்றேன்” என்றார்.
