ஜூன் 26 ஆம் திகதி காலை 11 மணியளவில் சுகவீன விடுமுறையின் கீழ் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் கொழும்புக்கு வரவுள்ளனர் என ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டணியின் பிரதிநிதி ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மேற்குறித்த தினத்தன்று அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் கொழும்புக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாக அவர் கூறினார். இது தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், க.பொ.த சா-தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளிலிருந்து விலக வேண்டியேற்படும் எனவும் ஜோசப் ஸ்டார்லின் மேலும் தெரிவித்துள்ளார்.
