மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!

பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம மற்றும் எல்ல பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டனர்.

இதன் பிரகாரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எல்ல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த நிமல் ரஞ்சித் வீரசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான சமந்த கபில ரத்நாயக்க, ஹேமாவதி குமாரிஹாமி மற்றும் பாரத ரணசிங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

அதேபோன்று எல்ல பிரதேச சபையின் சுயேச்சை உறுப்பினராக இருந்த பி. சுரேஷ் போலவே, ஊவா பரணகம பிரதேச சபையின் உப தவிசாளர் ஆர்.டி.குணபால, உறுப்பினர் டி.எம்.கருணாதாச மற்றும் ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் டி.ஐ.ரத்னபால ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply