ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா!

ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் பாபர்டோஸில் நேற்று (20) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துக் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்களையும், ஹட்திக் பாண்டியா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஆப்கானிஸ்தான் அணியின் பாரூக்கி, ரஷிட் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

182 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் ஹஸ்மதுல்லா ஓமார்சாய் 26 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply