மாத்தளை, பலபத்வெல, கிருலுகம பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதிய கோர விபத்தில் தாயும் அவரது பதின்ம வயது மகளும் பலியாகியுள்ளனர்.
வத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, தம்புள்ளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது தாய், தந்தை, மகன், மகள் உட்பட நால்வர் கொண்ட குடும்பமே முச்சக்கரவண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் 54 வயதான தம்மிகா பத்மினி மற்றும் அவரது 17 வயது மகள் சசினி தாரக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற மகனும், அதில் பயணித்த தந்தையும் தற்போது மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
