நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை (ஜூன் 26) இரவு 8.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தனது உரையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பார் எனவும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தனது விசேட அறிக்கையின் போது வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கையின் தோற்றம் குறித்து அறிவிப்பார் என ஊகங்கள்  தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு கணிசமான நிவாரணத்தை வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க நேற்று (23) சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply