400 மில்லியன் ரூபா பெருமதியான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!

சுமார் 400 மில்லியன் ரூபா பெருமதியான   4 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் கூடிய பொதி ஒன்று கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பொதி  பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக  கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply