பேருந்து- மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தவர் பலி!

மன்னார்- முருங்கன் ரயில் கடவை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (24) மாலை 5 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கு இடையில் உள்ள புகையிரத கடவைப் பகுதியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்  நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன்   (வயது-35) என்ற இளம் குடும்பஸ்தர் என தெரிய வருகிறது.

சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply