யாழ் மாநகரசபைக்குட்பட்ட வண்ணார்பண்ணை, நல்லூர் பகுதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளின் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த 19 திகதி உணவு தொழிற்சாலை, உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஓர் உணவு தொழிற்சாலை, மற்றும் மூன்று உணவகங்கள் அடையாளம்காணப்பட்டன . குறித்த உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் 24.06.2024ம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளை இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா குறித்த உணவு கையாளும் நிலையங்கள் அனைத்தையும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை வழங்கியுள்ளதுடன் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவு கையாளும் நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டன.
