குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை பாதுகாப்பான இடத்தில் அமைத்து தரக்கோரி அப்புத்தளை தம்பேத்தனை தேநீர் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பராமரிப்பு நிலையமானது முப்பது வருட காலமாக பாதுகாப்பற்ற அபாயகரமான இடத்தில் அமைந்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
இந்நிலையில் குறித்த நிலையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை என பல முறை உயர்மட்ட அதிகாரிகளுக்கு பிள்ளைகளின் பெற்றோர் தெரியப்படுத்திய போதிலும் இது பற்றி கவனத்தில் எடுக்கப்படாமையால் அங்கு வாழும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தம்பேத்தனை மக்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்த்தக்கது.
