அமைச்சர் விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (25) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிரதிவாதிகளுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 09-ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், அதுவரை தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply