வீட்டில் இருந்தவர்மீது துப்பாக்கிசூடு! சந்தேகநபர் தப்பியோட்டம்!

நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

திக்கோவிட்ட வத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் இருந்த போது, ​​முகத்தை மறைத்த நிலையில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டு நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply