போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல்!

கொழும்பு செராமிக் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதேவேளை, தொழிற்சங்க உறுப்பினர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றினால் இலங்கை ஆசிரியர்சங்க செயலாளர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போராட்டம் காரணமாக ஓல்கொட் மாவத்தை, லோட்டஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply