யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பிரதேச மக்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஐந்து வருங்களாக புனரமைக்கப்படாத இந்த வீதியை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற போதிலும் மிக மோசமான நிலையில் வீதி பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரவிக்கின்றனர்.
3 மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபற்ற ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் 5பேர் ஆளுனரின் செயலாளரை சந்தித்து அவர் ஊடாக ஜனாதிபதிக்கான மகஜரும் கையளித்தனர்.
