இணைய நிதிமோசடியில் ஈடுபட்ட 137 இந்திய மீனவர்கள் கைது!

பாரிய அளவிலான ஆன்லைன் நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்ததாகக் கூறப்படும் 137 இந்திய பிரஜைகள் நேற்று (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நாட்டின் பல இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் 55 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 29 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டதோடு 55 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி. நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை,  கொச்சிக்கடையில், 53 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன்,  31 மடிக்கணினிகள் மற்றும் 58  கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, மடிவெல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டு 8 மடிக்கணினிகள் மற்றும் 38 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதுடன், தலங்கம, பத்தரமுல்லை பகுதியில் 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, 8 மடிக்கணினிகள் மற்றும் 38 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 137 இந்தியர்களிடம் இருந்து மொத்தம் 158 கையடக்க தொலைபேசிகள், 16 மடிக்கணிணிகள், 60 மேசை கணிணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகநபர்கள் சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், இந்த இடங்களில் குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply