பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து அண்மையில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்காமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று பரிசீலிக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சர் அண்மையில் வெளியிட்டதாக மனுதாரர் நிறுவனங்கள் தெரிவித்தன.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவழக்கச் செய்யுமாறு கோரி தாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த போதும் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அமுல்ப்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வௌியிடாமல் இருக்க தீர்மானித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தோட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்த்தக்கது.