பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 01) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
கே.எல்.டி.ஜி. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் ரிச்மண்ட் நேற்று (28) தெரிவித்தார்.
“பல்கலைக்கழக அமைப்பு செயல்படாமல் 53 நாட்களாகிறது. பிரச்சினைகளை தீர்க்க அரசு இதுவரை எந்த ஒரு சாதகமான தலையீடும் செய்யவில்லை. தொழிற்சங்கங்கள் நேற்று கூடி இந்த தொழிற்சங்க போராட்டத்தை தொடர தீர்மானித்துள்ளன. உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
