பேருந்து கட்டணங்களில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 5.7 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய  பேருந்து கட்டணக் கொள்கையின்படி பேருந்து  கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாகும்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply