தமக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை செல்லுபடியாக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளும் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிணை விண்ணப்பம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
