மகனால் தாக்கப்பட்ட தந்தை உயிரிழப்பு!

இப்பலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டியகம பிரதேசத்தில் தந்தை ஒருவர் மகனால் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த கொலை சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதுடன்.

சம்பவத்தை அடுத்து பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தலையில் ரத்தக் காயங்களுடன் வீட்டின் தரையில் விழுந்து இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிரிபிட்டியகம, அலுத் வீதியில் வசிக்கும் 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் கொலைச் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் 34 வயது மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட தந்தையை மகன் தொடர்ச்சியாக தாக்கியதாகவும், கொலைச் சம்பவத்தின் போது சந்தேகநபரும் உயிரிழந்த நபரும் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply