சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை!

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸ்தானில் தடைவிதிக்கப் படுகிறது.

முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து இராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply