தரமற்ற நோயெதிர்ப்பு தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் விநியோக பிரிவிற்கு பெற்றமை தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் சந்தேக நபரான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று மகள்மார் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோரின் பெயரில் தனியார் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள 93.125 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி பத்திரங்கள் ஆகியவற்றை 7 நாட்களுக்கு தடைசெய்வதற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்கு இடமானவை என்பதற்கான சாட்சியங்களுக்கமைய, ஊழல் தடுப்புச் சட்டம் 2023 எண் 9 இன் பிரிவு 53 (1) இன் படி பண சுத்திகரிப்பு மோசடி குற்றத்தின் கீழ் 16 நிலையான வைப்புகளையும் 3 ஆயுள் காப்பீட்டு பத்திரங்களையும் தடை செய்ய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் புகார் செய்து தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
