கல்விசாரா ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்த சுரேன் ராகவன்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை உதய செனவிரத்ன குழுவிற்கு சமர்ப்பித்து, 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்,‘’கல்வி சாரா ஊழியர்களின் இந்தக் கோரிக்கைகள் நியாயமானவை. அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, உதய செனவிரத்ன குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடாக 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

மேலும், அவர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பணிக்கு சமூகமளிக்காத நாட்களை விடுமுறை நாட்களாகக் கருதி, தண்டனை ஏதுமின்றி பணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இந்நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல் அவர்களின் காலத்தை வீணடிக்காமல் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply