பாகிஸ்தான் பெட்ரோலியம் வழங்குனர்கள் சங்கம் இன்று (05) முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தீர்வு இன்றி நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலைநிறுத்தத்தின் போது நாடு முழுவதும் உள்ள 13,000 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரி காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.