இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்?

பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலை அடுத்து புதிய அரசாங்கம் பதவியேற்கவுள்ளநிலையில் பிரதமராக பதவியேற்கவுள்ள தொழிற்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய அரசாங்கத்தினால், இலங்கைக்கு எவ்வித விசேட அனுகூலமும் ஏற்படப் போவதில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் அந்த நாட்டு மக்களுக்கு, முதலில் புதிய அரசாங்கம் பாரிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரால் இலங்கைக்கு எவ்வித அனுகூலம் ஏற்படாதென்ற போதிலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான தொடர்புகள் பெரிய விடயமாக பார்க்கப்படும்.

அதேவேளை இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடரலாம் என பேராசிரியர் டியூடர் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னர் போலவே முன்னெடுக்கப்படும் என்பதால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென்றே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply