2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பதார்ர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை இணைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (10) வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜூலை 12 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூலை 12ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது நீடிக்கப்பட மாட்டாது என திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 23 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply