பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேலும் தொடரும்! புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்!

புதன்கிழமை (10) ஆரம்பிக்கப்பட்ட தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேலும் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) மாலை இடம்பெற்ற தமது தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், முழு புகையிரத சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கு ஒருபோதும் தயங்காது என்றும் சோமரத்ன இன்று முற்பகல் வலியுறுத்தினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply