குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையை அதிகரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகை தற்போதைய கண்காணிப்பு மதிப்பின் அடிப்படையில் அதிகரிக்கப்படும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு 2023 நவம்பர் 27ஆம் திகதி அமைச்சரவைக் கொள்கை ஒப்புதல் அளித்தது.
அதன்படி சட்ட வரைவு ஆசிரியரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.
இதன்படி, மேற்படி சட்டமூலத்தை அரச வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.