வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இயங்குநிலை தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply