முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தம்மை கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சமகி ஜன பலவேகய எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த தனது மனுவை இன்று (17) மீளப் பெற்றுள்ளார்.
குறித்த மனு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை எனவும், எனவே அதனை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, மனுவை மீளப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.