தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பாடசாலைகளை மூடவில்லை- மனுஷ நாணயக்கார!

விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்.

ஆனால் இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

களுத்துறை மாவட்டத்துக்கான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (18) மத்துகம பொது விளையாட்டரங்கில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.இங்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் நாட்டில் 10,000 பாடசாலைகளை மூடியதுதான் இவர்களின் செயற்திறமையாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பன்னிரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்து வீழ்ந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு பாரிய பங்களிப்பை செய்தார்கள்.

இவ்வாறு நாட்டுக்கு பங்களிப்பு செய்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே 100,000 தொழில்முனைவோரை நாம் உருவாக்குவோம்.அதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது அதாவது எமது நாட்டில் முதலீடு செய்ய கொரியா, ஜப்பான், இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து தொழில் முனைவோர் வந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply