பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கு, முதன் முறையாக இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் பார்வையற்ற சமூகத்தினர் பிரெய்லி முறையில் (பார்வையற்றவர்களுக்கானஎழுத்து முறைமை) வாக்குச் சீட்டின் அடையாளங்களை கண்டறியும் வகையில் விசேட முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கு சைகை மொழியில் வாக்குச் சீட்டு குறித்து அறிவிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,கடந்த காலங்களில் முன்னோடித் திட்டங்கள் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு அந்த வெற்றியின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கும் அதே வசதிகள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை விசேட தேவையுடையோர் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விசேட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.