இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது
இதன்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியைத் தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, எவ்வாறான பேச்சுக்கள் எமது சூழலில் இடம்பெற்றாலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியது போன்று இந்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று என தேர்தல்கள் ஆணைக்குழுவும் குறிப்பிட்டிருந்தது.