2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பல அதிவேக தொடருந்து பாதைகளுக்கு தீ வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிஸில் இருந்து மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி செல்லும் அதிவேக தொடருந்து பாதைகளில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தின் காரணமாக தொடருந்து போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 800,000 பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த போட்டிகளுக்கான தொடக்க விழா ஆரம்பமாக சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பமை திட்டமிட்ட செயல் என விசாரணைகள் தெரிவிக்கின்றன.