2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (26) நான்கு வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் இரு வேட்பாளர்களும் அடங்கியுள்ளனர்.
இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை), ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன), ஏ.எஸ்.பி. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோரே குறித்த 4 வேட்பாளர்கள் ஆவர்.