பாலியல் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் தமது திருமண வாழ்க்கையை நிறைவுறுத்த விவாகரத்து கோரிய பெண்ணின் கால்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பெண்ணின் தந்தை மற்றும் மாமாமார்களால் அவரின் கால்கள் இவ்வாறு வெட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாகிஸ்தானிய சமூகத்தில் பெண்களை அடிபணிய வைக்க வன்முறையைப் பயன்படுத்தும் போக்கு அதிகமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
சித்திரவதை செய்யும் தமது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டதால் தனது கால்கள் வெட்டப்பட்டதாக சம்பவத்தை எதிர்கொண்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.