காஞ்சன விஜயசேகரவும் ரணிலுக்கு ஆதரவு !

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், அதிக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளைத் தொடர ஜனாதிபதி ரணிலுக்குத் தமது ஆதரவை வழங்குவார்கள்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply