ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் துறைப் பிரதானியும் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஹமாஸின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் இவ்வாறு தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய இராணுவம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஹனியா, ஈரானிய ஜனாதிபதி மசூத் பிசாக்கியானின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குபற்றியதன் பின்னர், இருப்பிடம் திரும்பிய நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
62 வயதான ஹனியா, 1980களில் ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.