சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி விளம்பரங்கள் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆனந்த ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொதுவாக உணவின் முக்கிய எதிர்பார்ப்புகள் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

உணவால் நோய்களைக் குணப்படுத்த முடியாது அவ்வாறு உணவால் நோய்களை குணப்படுத்த முடியும் என்று யாராவது சொன்னால், நாட்டின் சட்டப்படி, பிரதானமாக உணவு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

முறையான மருத்துவ தரவு சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உணவு ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படி இல்லாமல் செய்வது சட்ட விரோதம்” என்றார்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply