இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!

ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் கொல்லப்பட்டதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் சூழ்நிலை உருவானால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈரானின் பதிலடியில் இது குறித்து தீர்மானிக்கப்படும் தொடர்ந்து அரசியல் மற்றும் பதற்றம் நிலவும் நிலைமைக்கு மத்திய கிழக்கு பிராந்தியம் தள்ளப்பட்டால், அது இலங்கையையும் முழு உலகத்தையும் மிகவும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் பதற்றம் தீவிரமடைந்தால் அது நிச்சயமாக இலங்கையை நேரடியாக பாதிக்கும். மத்திய கிழக்கு நாடுகளிலேயே 65 சதவீதமான எண்ணெய் வளம் உள்ளது.
போர் மூண்டால் மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் உலக நாடுகள் எண்ணெயை மிகப்பெரிய தொகையை தயார்ப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படுத்தும்.
இந்த போரால் இலங்கையின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் அரசியல் நிலைமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply