குழந்தை விளம்பரம் தொடர்பில் புதிய தீர்மானம்!

சிறு குழந்தைகளை முன்னிலைப்படுத்தி விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply