இலங்கையில் இன்று புதிதாக நான்கு கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் இன்று புதிதாக நான்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த நபரொருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த இருவரும் மற்றும் சென்னையில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2838 ஆக அதிகரி்த்துள்ளது.

13 நோயாளர்கள் இன்று பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதை அடுத்து, மொத்தமாக குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2537 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, மேலும் 290 கொரோனா தொற்றாளர்கள் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir