இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒன்லைன் வீசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமல்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் மற்றொரு இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.