ஈரானில் ஹமாஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் டெல்டா மற்றும் யுனைடெட் விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலுக்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் முதல் விமான சேவைகளை ரத்து செய்துள்ள யுனைடெட் நிறுவனமானது இதற்கான உரிய நடவடிக்கை பின்னர் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், ஒகஸ்ட் 14க்கு முன் டெல்டா நிறுவனத்தில் டெல் அவிவ் அல்லது அங்கிருந்து பயணத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறிருக்கையில், ஏர் கனடா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இஸ்ரேலுக்கான தங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை அடுத்து பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு விமான சேவையை ரத்து செய்தது. ஆனால் சில நிறுவனங்கள் பின்னர் சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.