ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கே ஆதரவு! – தயாசிறி ஜயசேகர

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான  திலங்க சுமதிபால மற்றும் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோரும் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,  புதிய குழுவொன்றுக்கு நாட்டை கையளிக்க வேண்டுமானால், ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டமைப்பில் அதற்கான பலமான தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும், அதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எமது அடையாளத்தை வைத்துக்கொண்டு  தனி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம் எனவும்
இந்த நேரத்தில் நாங்கள் சரியான முடிவை எடுத்துள்ளோம் என்று எங்கள் அன்பான கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply